கில்லி உண்மையிலே நடிகர் விஜய்க்கு ரொம்பவே முக்கியமான படம்.
அப்பா தயாரிப்பில் நடிக்க தொடங்கிய விஜய்க்கு (1992) பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம் பூவே உனக்காக (1996). அதுவரை குடும்ப ஆடியன்ஸ் என்படும் ஜெனரல் ஆடியன்ஸ் விஜய் பக்கம் திரும்பவில்லை. இந்த படம் விஜய் பக்கம் திரும்ப வைத்தது. அது வரைக்கும் வந்த படங்கள் எல்லாமே விஜயை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்த படமாகவே அமைந்து போனது. அடுத்து காதலுக்கு மரியாதை (1997 ) இன்னும் அடுத்த கட்டம் அவரை நகர்த்தியது.
காதலுக்கு மரியாதை விஜய் ஒரு டிரெண்ட் செட்டராக மாறிப்போனார். கதையும் மாறிபோனது. தொடர்ந்து அப்படியான படங்களே அமைந்து போனது. காதலுக்காக விஜய் என்றே கதைகள் அமைந்து போனது. ஒரு கட்டத்தில் அது மெல்ல தேய தொடங்கியது. ஏராளமான காதல் கதைகள் வந்து குவிந்தன.
சரி ஆக்ஷன் பிளாக் என பகவதி, யூத், தமிழன் என முயற்சித்தும் செல்ஃப் எடுக்க முடியவில்லை. இந்த நேரத்தில் அவரை மீட்க வந்த படம் தான் திருமலை (2003). கொஞ்சம் ஓவர் ஹீரோயிசம் கொஞ்சம் எமோசனல் என கலந்துகட்டிய படம். விஜய் இனி எந்த பாதையின் போகலாம் என்பதை திர்மானமாக சொல்லியபடமும் .
இந்த சூழலில் தான் ஒக்கடு படம் கில்லியாக விஜயிடம்(2004) செல்கிறது. ஏற்கனவே பரபர என கதை சொல்லும் தரணி டீமிடம் இந்த கதை சிக்கியது. அவர்கள் இன்னும் மெருகேற்ற அதுவரை இருந்த விஜய் மேனரிசத்தையே அந்த படம் மாற்றியது, அதன் பிறகு விஜய் கொஞ்சம் தெளிவானர். கில்லி அவரை 'சூப்பர் ஸ்டார்' இருக்கையை நோக்கி நகர்த்திய படங்களில் ரொம்ப முக்கியமானது.
சில படங்கள் சில ஹீரோக்களுக்கு லைஃப் டைம் படமாக அமைந்து போகும். விஜய்க்கு அப்டி அமைந்த மூன்றாவது படம் கில்லி. முன்னதாக பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை அமைந்து போனது. இன்னும் சிலருக்கு துள்ளாத மனமும் துள்ளும் சொல்லுவார்கள். என் கணக்கில் அது இல்லை.
அவரோட செட் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பூஸ்டர் அது. மற்ற நடிகர்களுக்கும் லைஃப் டைம் படம் கிடைச்சது ஆனா லேட்டா கிடைச்சது. ( உடனே பருத்தி வீரன் கார்த்தினு வர வேண்டாம்.. அவரு விஜய்க்கு ஜூனியர் ). 🐐
கருத்துகள்
கருத்துரையிடுக